



What is an Eye Wash Cup?
An eye cup is a small, smooth cup made of glass or plastic that is used to clean the eyes. It fits over the eye-socket very comfortably and uses water or a medicated solution to flush out the eyes.
Types of eye wash cups:
Eye wash cup can be made out of:
- Transparent plastic material.
- Non-transparent plastic material
- Glass
- Porcelain
Liquid used in eye wash cup:
Mostly clean drinking water is used.
Time:
You can wash your eyes with the help of eye wash cup by morning or evening. There is no fixed time for it. If you can maintain a particular time, you will not miss it.
How to Use:
- First, make sure your eye wash cup has been properly cleaned.
- Then, fill the cup with clean water or a solution. If you are using anything other than water, consult your physician prior to use.
- Next, you will bring the cup to your eye. It helps to have a cup with a stand as this is easier to hold between your fingers. Make sure your eye is shut as you bring it towards the cup.
- Once the eye wash cup is securely fitted around your eye, blink your eye and swish the wash cup to allow the water or solution to properly and completely clean the eye.
Benefits:
Proper eye health, such as regularly cleaning your eyes, can help remove small pollutants and dirt, while also relieving the eyes of any strain they may have experienced throughout the day. Eye wash cups can help those with dry eye by providing added moisture to the eyes. Those using eye wash cups regularly claim the practice helps reduce strain, maintain good eye health, and helps improve circulation to the eye.
Manufacturer:
Aruvi yoga manufactures quality eye wash cups. Available in transparent and white colors . You can get at wholesale price from direct manufacturer. Eye wash cup helps you to take water very comfortable over the eyes. You can pour clean water inside eye wash cup; take the cup close to your eye. You can touch your eyes with water with closed eyes, and then open your eyes inside water and you can move your eyes. You can press the cup softly, so that your eyes get better wash. Then, change water to your other eye.Eye Wash: your eyes get various dust particles due to pollution in everyday life. You may not notice some particles as they can not been seen. Vehicles smoke, dust from earth, industrial pollution make your eyes much strained and you feel irritating too.Your eyes require proper care at least every day a good and soft touch with pure water. This helps to remove the dust particles more efficiently though the eye can remove naturally. You will feel refreshed and cool. Practice with guidance of a physician.
What is eye wash cup?
How to use eye bath cup?
Eye bath cup helps to remove those dust particles. Our eyes naturally remove them with tears, yet the more strain over the eyes bring troubles to eyes.You can use plain drinking water for eye wash cup. First of all clean the cup with water then pour the water into eye bath cup, fill it to the brim. Take your eyes in to eye wash cup gently. You can feel touch of cool water over the eyes. Fix eye bath cup in your eyes then slowly open your eyes. It can be practiced separately for each eye.Open your eye inside eye wash cup move your eye ball up and down and sidewise, then rotate if you feel alright.
Practice to your other eye also. Eye wash can be done every day as it makes your eyes to feel fresh. The strain over the eyes due to watching mobile phones and computers can be relieved for some time. Eyes need enough rest and blinking for keeping moisture over them. This practice is not assuring cure for any eye disease but supports eye care.
கண் குவளை
தரமான கண்குவளைகளை விற்பனை செய்வதில் வாடிக்கையார்களின் நன்மதிப்பை பெற்றது அருவியோகா!
கண் குவளை என்றால் என்ன?
ஆங்கிலத்தில் Eye Wash Cup என்று கூறப்படும் கண்குவளை என்பது கண்ணாடி அல்லது நெகிழி(பிளாஸ்டிக்) போன்ற இனபிற மூலப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்ற ஒரு சிறிய, மிருதுவான குவளை ஆகும். இது கண்களை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. அருவியோகாவினால் உற்பத்தி செய்யப்படும் கண்குவளைகள், மிகச்சரியாக கண்களைச் சுற்றி மிக எளிதாகப் பொருந்துகிறது. நீர் அல்லது கரைசல் மூலம் கண்களிலுள்ள தூசு, அழுக்கு போன்றவற்றை வெளியேற்றி கண்களை சுத்தமாக வைத்திருக்க இது பயன்படுகிறது.
கண் குவளை பின்வரும் வெவ்வேறு வகையான மூலப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன :-
- ஒளி ஊடுறுவும் நெகிழி (ட்ரான்ஸ்பேரன்ட் பிளாஸ்டிக்)
- ஒளி ஊடுறுவா நெகிழி (நொன் – ட்ரான்ஸ்பேரன்ட் பிளாஸ்டிக்)
- கண்ணாடி (கிளாஸ்)
- பீங்கான் (செரமிக்)
கண்களை சுத்தப்படுத்துவதன் அவசியம் :
உடலிலுள்ள கண், காது, மூக்கு போன்ற ஒவ்வொரு வெளிஉறுப்புக்களும் நம் உடலினுள் இருக்கும் உறுப்புக்களுடன் தொடர்புபடுகிறது. வெளிஉறுப்புக்களின் ஆரோக்கியம் உடலினுள் இருக்கும் உறுப்புக்களின் ஆரோக்கியத்திலும் பங்காற்றுகிறது. அந்த வகையில் கண்கள் சுத்தமாக இருக்கும் போது கல்லீரலும் சுத்தமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
அன்றாட வாழ்க்கையில் வேலைகளில் நமது கண்களுக்குள் நமக்கே தெரியாமல் அழுக்குகள் செல்கின்றன. நாம் அவற்றை கவனிப்பது கிடையாது. உதாரணமாக: வாகனப்புகை, பூமியிலிருந்து வெளிவரும் தூசுகளைக் குறிப்பிடலாம். அதிக நேரம் கைப்பேசி பார்த்தல், கணினி உபயோகத்தினால் கண்கள் விரைவிலே சோர்வடைந்து விடும்.
இவ்வாறான செயல்பாடுகளினாலும் அழுக்குகளினாலும் கண்களில் எரிச்சல் போன்ற அசௌகரியங்களை எதிர் கொள்வீர்கள்.
இதனால் நிச்சயமாக உங்கள் கண்களுக்கு ஒவ்வொரு நாளும் கவனிப்பு தேவைப்படுகிறது.
கண்களால் இயற்கையாகவே அழுக்குகளை அகற்ற முடியும் எனினும், கண் குவளையானது தூசுகளை மிகவும் திறமையாகவும் ஒழுங்காகவும் அகற்ற உதவுகிறது. இதன்மூலம் நீங்கள் புத்துணர்ச்சியையும் கண்களில் ஈரப்பதத்தையும் உணர்வீர்கள்.
இதுமட்டுமன்றி கண் குவளை பயன்படுத்தி நாம் கண்களை சுத்தப்படுத்தும் போது இன்னும் பல நன்மைகள் ஏற்படுகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை கீழ்வருமாறு:
நன்மைகள் :
- நம் கண்களை தவறாது சுத்தம் செய்வதால் கண் ஆரோக்கியம் பேணப்படுகின்றது.
- கண்களில் காணப்படும் சிறிய தூசு துணிக்கைகள் மற்றும் அழுக்கு போன்றவற்றை அகற்ற உதவும்.
- நாள் முழுதும் அனுபவித்த வேலைகளினால் கண்களில் ஏற்பட்ட அயர்வைப் போக்கும்.
- இரத்த ஓட்டம் அதிகரிக்க உதவுகின்றது.
- கண்களை சுத்தப்படுத்த பயன்படும் கண் குவளையானது, கண்களுக்கு கூடுதலான ஈரப்பதத்தை அளிப்பதனால், வறண்ட கண்களைக் கொண்டவர்களுக்கு கண்களை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும்.
வழக்கமாக கண் குவளை பயன்படுத்துபவர்களின் கருத்துக்கள் :
இந்த பயிற்சி சோர்வினை நீக்கவும், கண் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுவதாக கூறுகின்றனர்.
கண் குவளையில் பயன்படுத்தும் திரவம் :
பெரும்பாலும் சுத்தமான குடிநீரே பயன்படுத்தப்படுகிறது
பயிற்சிக்கான நேரம் :
உங்களுடைய கண்களை கண்குவளையின் உதவியுடன் காலை அல்லது மாலை நேரங்களில் சுத்தப்படுத்திக் கொள்ள முடியும். இதனை உபயோகப்படுத்துவற்கு குறிப்பிட்ட நேரம் ஒன்றில்லை. எனினும் நீங்கள் பிரத்யேகமான நேரத்தை நிர்ணயித்துக் கொண்டால் தவறமால் உபயோகிக்க எளிதாகும்.
பயிற்சி செய்யும் முறை :
- முதலில் நீங்கள் பயன்படுத்தும் கண்குவளை முறையாக சுத்தம் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
- பின்னர் சுத்தமான நீரினால் நீர் தளும்பும் வரை குவளையை நிரப்ப வேண்டும். நீங்கள் நீர் அல்லாமல் அதற்கு பதிலாக கரைசல் நிலையிலுள்ள வேறொன்றை உபயோகப்படுத்துகிறீகள் எனின், மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
- அடுத்து, உங்களுடைய கண்ணை நோக்கி மெதுவாக கண்குவளையை கொண்டு செல்லுங்கள். உங்கள் விரல்களுக்கிடையில் குவளையை எளிதாக பற்றிக் கொள்ள முடிவதால் அது விழுந்து விடாது நிலையாக இருக்கும்.
- கண்குவளையானது உங்கள் கண்ணைச் சுற்றி பாதுகாப்பாக பொருத்தப்பட்டவுடன், மென்மையாக குவளையை அழுத்தியவாறு உங்கள் கண் நனையுமாறு வைத்து மேலும் கீழும், பக்கவாட்டிலும் கண் விழியை அசைக்கவும்.. கண்குவளையினுள் காணப்படும் நீர் அல்லது கரைசல் ஒழுங்கான முறையில் உங்கள் கண்ணை பூரணமாக சுத்தப்படுத்த இந்த செயல்பாடு உதவுகிறது.
- ஒரு கண்ணை சுத்தம் செய்த பின்னர் குறிப்பிட்ட அந்நீரை குவளையிலிருந்து அகற்ற வேண்டும். அதன் பின்னர் குவளையை சுத்தமான நீரினால் இலகுவாக கழுவி விட்டு கண்குவளையை மீண்டும் நீர் அல்லது கரைசல் மூலம் நிரப்பி மேற்சொன்னபடி மற்ற கண்ணையும் சுத்தம் செய்ய வேண்டும்.
இந்த பயிற்சியை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். இப்பயிற்சியினால் உங்களது கண்களுக்கு எந்தவிதமான நோய்களும் ஏற்படாது. மாறாக, கண்களின் பராமரிப்புக்கு துணை புரியும்.
உயர்தர கண் குவளைகளை வாங்க விரும்புகிறீர்களா?
வாடிக்கையாளரின் நன்மதிப்பை பெற்ற “அருவியோகா” எப்பொழுதும் தரமான பொருட்களையே உற்பத்தி செய்து வருகிறது. நாங்கள் யோகா கடைகள், நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு மொத்த விலையில் எங்களது தயாரிப்புக்களை வழங்கி வருகிறோம்.
மேலும் சர்வதேச ரீதியில் மிகப்பெரும் உற்பத்தியாளர்களில் ஒருவராக “அருவியோகா” திகழ்கிறது. எங்களிடமிருந்து பெற்று உங்களது நுகர்வோர்களுக்கு விற்பவர்களையும் (Resellers) நாம் வரவேற்கிறோம்.
ஒளி ஊடுறுவக்கூடிய (Transparent) மற்றும் ஒளி ஊடுறுவா (Non-Transparent) நெகிழி (பிளாஸ்டிக்) பயன்படுத்தி வெள்ளை நிறத்தில் தரமான கண் குவளைகளை “அருவியோகா” தயாரிக்கிறது. இப்போது உங்களால் நேரடி உற்பத்தியாளரான அருவியோகாவிலிருந்து மொத்த விலையில் கண் குவளைகளைக் கொள்வனவு செய்ய முடியும்!
உயர்தர கண்குவளைகளை மொத்த விலையில் கொள்வனவு செய்து பயனடைவதற்கு, இப்பொழுதே எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.