1. சுத்ர (ரப்பர்) நேத்தி
சுத்ர நேத்தி பயிற்சிக்கு தேவைப்படுபவை :
- ரப்பர் கதீட்டர் (சிறு குழாய் போன்றது)
- அமர்வதற்கான இடம்
சுத்ர நேத்தி பயிற்சி முறை :
உங்களுக்கு வசதியான இடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். வீட்டிற்கு வெளிப்புறத்தில் செய்ய முடியும்.
- முதலில், உங்களிடம் இருக்கும் ரப்பர் குழாய்கள் சுத்தமாக இருக்கின்றனவா என்பதை உறுதி செய்ததன் பின் (Sterilize) அதில் ஒன்றை எடுக்கவும்.
- அடுத்து, தலையை சிறிது முன்னோக்கி வையுங்கள்.
- ரப்பர் நேத்தியின் மிருதுவான முனைவினை மெதுவாக நாசியினுள் செலுத்துங்கள்.
- இவ்வாறு நீங்கள் மூக்கின் பாதையில் குழாயை செலுத்துகையில் தொண்டை வழியாக குழாய் வெளிவருவதனை உணர்வீர்கள்.
- இப்போது, நீங்கள் உள்ளே அனுப்பிய குழாயின் முனைவினை ஆட்காட்டி விரல் மற்றும் நடுவிரலைப் பயன்படுத்தி தொண்டையிலிருந்து வாய் வழியாக மெதுவாக வெளியே எடுக்கவும்.
- பின்னர், ரப்பர் நேத்தியின் இரு முனைகளையும் கைகளால் பிடித்து குழாயை மெதுவாக பின்னோக்கி மற்றும் முன்னோக்கி இழுக்கவும். இதன் மூலம் நாசி அடைப்புக்கள் நீங்குகிறது. அத்துடன் இது மசாஜ் ஆகவும் செயல்படுகிறது.
- இவ்வாறு 5 முறை செய்து வாயின் வழியாக குழாயை மெதுவாக அகற்றவும்.
- இவ்வாறே மூக்கின் மற்ற துவாரத்திற்கும் மீதமிருக்கும் மற்ற ரப்பர் குழாயை உபயொகித்து சுத்ர நேத்தி பயிற்சி செய்யவும்.
Reviews
There are no reviews yet.